ஐபோன் பயன்படுத்த தடை விதித்த அம்மாவை கொலை செய்ய முயன்ற 12 வயது சிறுமி.

iphoneதற்போதுள்ள இளையதலைமுறையினர் ஸ்மார்ட்போன், ஐபோன்களுக்காக பல விபரீதங்களை செய்யவும் தயாராகி வரும் நிலையில் டீன் ஏஜ் வயதுள்ள ஒரு பெண் ஐபோனுக்காக தன்னை பெற்றெடுத்த அம்மாவை கொலை செய்ய முயன்ற செய்தி அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள பவுலடர் என்ற நகரில் 12 வயது சிறுமி ஒருவர் தனது அம்மாவை இரு முறை விஷம் வைத்து கொல்ல முயன்றிருக்கிறார். முதல் முறை மார்ச் 2 ம் தேதி அந்த பெண்மணி, தனது மகள் கலந்து கொடுத்த பானத்தை அருந்திய போது தலைசுற்றலுக்கு ஆளாகி இருக்கிறார். எனினும் மகள் பாத்திரத்தை சரியாக கழுவாமல் பானம் கலந்திருக்க வேண்டும் என நினைத்து விட்டுவிட்டார். ஆனால் இரண்டாவது முறை மார்ச் 6 ம் தேதி தண்ணீர் குடிக்க முயன்ற போது அதில் ஒருவித வாசனை வந்ததை அடுத்து சந்தேகம் அடைந்த தாய், தன்னுடைய மகளை அழைத்து விசாரித்தபோது, அவரது மகள், பானத்தில் விஷம் கலந்து கொலை செய்ய முயன்றதாக கூறியதை அதிர்ச்சி அடைந்துள்ளார்.  ஐபோனை பயன்படுத்த விடாமல் தனது தாயார் பறித்துக்கொண்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தின் காரணமாக மகள் இவ்வாறு செய்ததாக கூறாப்படுகிறது.

இதனையடுத்து அந்த பெண்ணின் அம்மா சிகிச்சைக்காக மருத்துமனை சென்றவர் அங்கிருந்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களின் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்பின் மோசமான உதாரணமாக இது கருதப்படுகிறது. ஸ்மார்ட்போன் கட்டுப்பாட்டை கையாளும் விதத்தில் கவனம் தேவை என்பதையும் இது உணர்த்துவதாக உளவியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply