சென்னையில் மீட்டர் பொருத்தாத 120 ஆட்டோக்களின் லைசென்ஸ் ரத்து.

8

தமிழ்நாடு அரசு கடந்த ஆறு வருடங்களுக்கு பின்னர் ஆட்டோ கட்டணத்தை மறுசீரமைத்து புதிய கட்டணத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் நிர்ணயம் செய்தது. அதன்படி அனைத்து ஆட்டோக்களிலும் மீட்டர் பொருத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதற்கான காலக்கெடுவும் முடிந்த நிலையில் மீட்டர் பொருத்தப்படாத ஆட்டோக்கள், மற்றும் மீட்டர் பொருத்தப்பட்டிருந்தும் கூடுதலான கட்டணம் வசூல் செய்த ஆட்டோக்கள் என 120 ஆட்டோக்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை நகரில் உள்ள பல ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தப்படவில்லை என்றும், சில ஆட்டோக்களில் மீட்டர் இருந்தும் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் தமிழக அரசு அறிவித்திருந்த ஹெல்ப்லைன் போன் மூலம் புகார்கள் குவிந்ததால், நேற்று அதிரடியாக சென்னையின் அனைத்து ஆட்டோக்களிலும் திடீர் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் மீட்டர் பொருத்தாமலும், அதிக கட்டணம் வலுக்கட்டாயமாக வசூல் செய்த ஆட்டோகள் என சுமார் 120 ஆட்டோக்கள் பிடிபட்டன. இவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.

 

Leave a Reply