சொந்த தொகுதி திரும்ப தயங்கும் 122 எம்.எல்.ஏக்கள். மக்கள் புரட்சி ஏற்படுமா?
தமிழக மக்களில் பெரும்பாலானோர் சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நீட்டிக்க கூடாது என்றே விரும்பினர். சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் தொகுதி எம்.எல்.ஏக்கள் இந்த கருத்தை வலியுறுத்தி வந்தனர். ஆனால் மக்களின் விருப்பத்திற்கு மாறாக 122 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்ததால் மக்கள் அந்த எம்.எல்.ஏகள் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
இந்நிலையில் வாக்கெடுப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது அந்த 122 எம்.எல்.ஏக்களும் சொந்த தொகுதிக்கு திரும்ப வேண்டிய நிலை உள்ளது. ஆனால் மக்கள் கொந்தளிப்பு காரணமாக சொந்த ஊர் செல்ல எம்.எல்.ஏக்கள் தயங்குவதாக தெரிகிறது. ஏற்கனவே அந்த எம்.எல்.ஏக்களின் வீடுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்த போதிலும் மக்கள் புரட்சி ஏற்படும் என்ற பயத்தில் பல எம்.எல்.ஏக்கள் சென்னையிலேயே தங்கியுள்ளனர்.
அரசியல்வாதிகளுக்கு பொதுமக்கள் பயந்த காலம் போய், தற்போது மக்களுக்கு அரசியல்வாதிகள் பயப்படும் காலம் வந்துவிட்டதால் மக்கள் புரட்சி ஏற்பட்டால் அதை அரசியல்வாதிகளால் சமாளிக்க முடியாது என்றே கூறப்படுகிறது.