ஆட்சி அமைக்க தேவையான 117 இடங்களையும் தாண்டி 126 தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளதால் அதிமுக தொண்டர்கள் அதிமுக தலைமையகத்தில் கூடி இனிப்புகளை வழங்கி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் குறைந்த அளவு தொண்டர்களே உள்ளனர். அவர்களும் உற்சாகமின்றி சோகத்துடன் காட்சி அளிக்கின்றனர்.
முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட விஜயகாந்த் அவர்களின் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் ஆள் நடமாட்டமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.