12GB ரேம், 1TB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்!

12GB ரேம், 1TB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்!

2உலகிலேயே முதன்முறையாக 12GB ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சான் பிரான்ஸிஸ்கோவை சேர்ந்த ‘டுரிங் ரோபோட்டிக்’ என்ற ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப நிறுவனம் உலகிலேயே முதல்முறையாக 12 GB ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போனின் சிறப்பம்சங்கள்:

60 மெகா பிக்சல் கொண்ட பின்புற கேமிராவும், 20 மெகா பிக்சல் கொண்ட முன்புற கேமிரா, தனித்தனியாக இரண்டு 256 GB ஸ்டோரேஜ் வசதிகள் , மெமரி கார்டு மூலம் 500 GB வரை ஸ்டோரேஜை நீட்டித்துக் கொள்ளும் வசதி, ஆக மொத்தம் 1 TB ஸ்டோரேஜ் வசதி உள்ள இந்த போனில் 4 சிம்கார்டுகளை பயன்படுத்த முடியும்.

செயற்கை அறிவுத்திறனுடன் கூடிய சக்தி வாய்ந்த பிராசஸ‌ர் இந்த போனில் பொருத்தப்பட்டிருக்கும். தற்போதைய பேட்டரிகளை விட 3 மடங்கு அதிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் பியூயல்களால் உருவாக்கப்பட்ட பேட்டரியும், கைரேகை மூலம் போனை லாக் செய்யும் பயோமெட்ரிக், பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் வசதிகளும் உண்டு. வாய்ஸ் மூலம் போனை ‘ஆன்’ மற்றும் ‘ஆப்’ செய்யும் வசதி இருப்பினும் இந்த போன் முதலில் ஸ்வார்டுபிஷ் என்ற இயங்குதளத்தில் மட்டுமே இயங்கும் என கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 2017ஆம் ஆண்டு இறுதிக்குள் சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply