13 நிமிடங்களில் ஃபுல்சார்ஜ்: உலகின் அதிவேகமான செல்போன் சார்ஜ் அறிமுகம்

13 நிமிடங்களில் ஃபுல்சார்ஜ்: உலகின் அதிவேகமான செல்போன் சார்ஜ் அறிமுகம்

13 நிமிடத்தில் ஒரு செல்போன் ஃபுல் சார்ஜ் ஆகும் அளவிற்கு உலகிலேயே முதன்முறையாக அதிவேகமாக சார்ஜ் ஆகும் சார்ஜரை விவோ நிறுவனம் அறிமுகம் செய்கிறது. இந்த சார்ஜர் 120 வாட் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்மார்ட்போனில் எல்லோருக்கும் உள்ள மிகப்பெரிய பிரச்னையே சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடுவதுதான். எவ்வளவுதான் விலையுயர்ந்த போனாக இருந்தாலும், அதில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இருந்தாலும் சார்ஜ் நிற்கவில்லை என்றால் அதனால் எந்த பயனும் இல்லை.

இந்த நிலையில் சீன நிறுவனமான விவோ, 120 வாட் திறன் கொண்ட அதிவேக சார்ஜரை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் 4000 MAH திறன் கொண்ட பேட்டரியை வெறும் 13 நிமிடங்களில் முழு அளவில் சார்ஜ் செய்ய முடியும். அதேபோல் ஐந்து நிமிடங்களில் 50% சார்ஜ் செய்து கொள்ளலாம்

Leave a Reply