6.74 கோடி பேர்களுக்கு 13.48 கோடி இலவச முகக்கவசங்கள்:

 தமிழக அரசு அறிவிப்பு

தமிழக மக்களை கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாக்க 13.48 கோடி இலவச முகக்கவசங்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது

தமிழகத்தில், 2.08 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளதாகவும், இவற்றில், 6.74 கோடி குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 2 முகக்கவசங்கள் வீதம் 13.48 கோடி முகக்கவசங்கள் வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த முகக்கவசம் கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில், விலை நிர்ணய குழு அமைக்கப்பட்டுள்ளது.

துணியினால் தயாரிக்கப்பட்ட இந்த முகக்கவசங்கள் பாதுகாப்பானவைகளாக இருக்கும் என்றும், பொதுமக்கள் அத்தியாவசிய தேவை காரணமாக வெளியே செல்லும்போது இந்த முகக்கவசங்களை அணிந்து செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply