நேற்று உலகம் முழுவதும் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், பிரபல தனியார் நிறுவனம் ஒன்று உலக அளவில் அதிக மாசுபட்ட நகரங்கள் எவை எவை என்ற ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவை நேற்று வெளியிட்டது. இந்த ஆய்வு முடிவில் உலக அளவில் அதிக மாசுபட்ட முதல் இருபது நகரங்களில் 13 இந்திய நகரங்அள் இடம்பெற்றுள்ளதாக அதிர்ச்சி மிகுந்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதுமட்டுமின்றி உலகின் மாசுபட்ட 10 நதிகளில் இந்தியாவின் புனித நதிகள் என்று அழைக்கப்படும் கங்கை, யமுனை நதிகள் இடம்பெற்றுள்ளதாகவும், கார்பனை அதிகம் வெளியிடும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது. இந்தியாவில் உள்ள தூய்மையான நகரங்களில் ஒன்றாக தமிழகத்தின் கோயமுத்தூர் நகரம் இருப்பதாகவும், இந்த நகர் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்கின்றனர் என்றும் அந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
இந்திய தலைநகர் புதுடெல்லி, குஜராத்தில் உள்ள வபி, ஒடிசாவில் உள்ள சுகிண்டா ஆகிய நகரங்களில் உலகின் மிக மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக இருக்கின்றது என்று ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.