திருமலை திருப்பதிக்கு சொந்தமான 1,300 கிலோ தங்கம் வங்கியில் டெபாசிட்!
திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமான 1,300 கிலோ தங்கம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்க நகைகள் மட்டுமே ஆண்டுக்கு ஒரு டன்னை கடந்து வருகிறது. இந்த தங்க நகைகள் மும்பையில் உள்ள தங்கசாலைக்கு அனுப்பி உருக்கப்பட்டு தங்க கட்டிகளாக மாற்றப்படுகிறது.
பின்னர் பல்வேறு அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த நிலையில் காணிக்கையாக கிடைத்ததில் இருந்து கூடுதலாக 1,311 கிலோ தங்கத்தை பஞ்சாப் நேஷனல் வங்கியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் டெபாசிட் செய்துள்ளது.