13வது சென்னை சர்வதேச திரைப்படவிழா: இன்று என்ன படம் பார்க்கலாம்?

ciff13வது சென்னை சர்வதேச திரைப்படவிழா சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் இன்று என்னென்ன படங்கள் பார்க்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

உட்லண்ட்ஸ் சிம்பொனி | காலை 11 மணி

கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டது. கேரள உலகத் திரைப்படவிழாவின் வரலாற்றிலேயே கடந்த 20 ஆடுகளில் உச்சபட்ச விருதுகளைப் பெற்ற ஒரே படம். தென்னிந்தியாவின் ஒரு குக்கிராமத்தில் 18ஆம் நூற்றாண்டில் கதை நடக்கிறது. பேரனுக்கு இந்த உலகத்தில் வாழும் ஒரே உறவான தாத்தாவோடு அவனுக்குள்ள தொடர்பை உருக்கமாக பேசுகிறது. ஆன்டன் செகாவின் வான்கா சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம்.

———————

Three Windows & A Hanging| Dir.:Isa Qosja Albania|2014|94’

உட்லண்ஸ் | மாலை 4.30 மணி

பாரம்பரிய கிராமம் ஒன்றில், போருக்குப் பிறகான வாழ்க்கை மெதுவாகத் தொடங்குகிறது. அங்கிருக்கும் பள்ளி ஆசிரியை லஷ், தன் மனசாட்சியால் உந்தப்படு ஒரு சர்வதேச பத்திரிக்கையாளருக்க் பேட்டி தருகிறாள். அதில் தானும், கிராமத்தை சேர்ந்த மூன்று பெண்களும் போரின் போது, செர்பிய ராணுவத்தால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதை சொல்கிறாள். இது அந்தக் கிராமத்தில் இருக்கும் ஆண்களுக்கு தெரியவரும்போது, அவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் சந்தேகப்படுகின்றனர். தொடர்ந்து லஷ் மற்றும் அவளது சின்ன மகனுக்கு எதிரான பிரச்சாரத்தையும் தொடங்குகின்றனர்.

—————

Two Lives| ZWEI LEBEN Dir.:Georg Maas Germany|2014|97’

கேஸினோ | மாலை 4.:45 மணி

ஐரோப்பா 1990, பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது. கிழக்கு ஜெர்மனி உதயமானது, அதன்பின்னர் காதரீன், இப்போதும் அவள் நார்வேயில் கடந்த 20 ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறாள். அவள் ஒரு போர்க்குழந்தை. ஒரு நார்வே பெண்ணுக்கும் ஜெர்மன் நாஸி ராணுவ வீரனுக்கும் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பிறந்தவள். காதரீன் தன் தாயோடும், தந்தையோடும் மகள் மற்றும் பேத்தியோடும் ஒரு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வந்தாள்.

ஆனால் வழக்கறிஞர் போர்க் குழந்தைகள் சார்பில், அவர்களை நார்வே நாட்டுக்கு எதிராக விசாரணை சாட்சி சொல்ல அழைக்கப்படுகிறார்கள். ஆனால் அவளும் அவள் தாயும் சாட்சிசொல்ல மறுத்துவிடுகிறார்கள். தற்போது காதரீனுக்கும் அவளது கணவருக்குமிடையே பிரச்சனை வருகிறது. அவர்கள் இதுநாள்வரை ஒன்றாக வாழ்ந்து வந்தனர், அது பொய்யை அடிப்படையாகக் கொண்டதா? படிப்படியாக தன் வாழ்வின் மறைவுத் திரையை விலக்கி ரகசியங்களை வெளியிடுகிறாள்.

—————

Lost in Thailand|Ren zai jiong tu: Tai jiong Dir.:Zheng XU China|2012|105’

ஐநாக்ஸ் 3 | காலை 12.00 மணி

சூ மற்றும் போ ஆகிய இருவரும் போட்டி மனப்பான்மை கொண்ட மேலாளர்கள். புரட்சிகரமான புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும், அதன் மூலம் நிறுவனத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரவும் எண்ணுகின்றனர். தங்களுடைய மேலதிகாரியைச் சந்தித்து, தங்களை நிலைப்படுத்திக் கொள்ளவும் விரும்புகின்றனர். எதிர்பாராத விதமாக, அவரின் மேலதிகாரி வடக்கு தாய்லாந்துக்குச் சென்றுவிடுகிறார். மேலாளர்கள் இருவருக்குள்ளும், யார் அவரை முதலில் சந்திப்பது என்ற போட்டி எழுகிறது.

விரைந்து செல்லும் சூ, பாங்காக் செல்லும் முதல் விமானத்தைப் பிடிக்கிறார். தன்னுடைய செல்பேசியின் அலைவரிசையைக் கண்காணித்து, போ தன்னைப் பின் தொடரக்கூடும் என்று யோசிக்கிறார் சூ. இதனால் அருகில் இருந்த பயணியான வேங்கின் பையில், செல்பேசியை ஒளித்து வைக்கிறார். பின்னர் வேகமாக இறங்கி ஒரு டாக்ஸியைப் பிடிக்கச் செல்கிறார். தன்னுடைய பையில் சூவின் செல்பேசியைப் பார்த்த வேங், அதைக் கொடுக்கச் செல்கிறார்.

இந்தக் களேபரத்தில் சூவின் பாஸ்போர்ட்டும், வேங்கின் பணப்பையும் தொலைந்து போகிறது. இரண்டுமே இல்லாமல் விமானத்தில் செல்ல முடியாது என்பதால் ரயிலில் செல்ல இருவரும் முடிவு செய்கின்றனர். சேர்ந்து பயணிக்கும் இருவரும் கோயிலுக்குச் செல்கின்றனர்; புகைப்படங்கள் எடுத்துக் கொள்கின்றனர். அப்போது வேங்கின் வாழ்க்கை ரகசியம் சூவுக்குத் தெரியவருகிறது. அதற்குள் போ, மேலதிகாரியின் இருப்பிடத்தை நெருங்குகிறார்….

Leave a Reply