14 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம்: கர்நாடக சபாநாயகர் அதிரடி
கர்நாடக சட்டமன்ற சபாநாயகர் இன்று அதிரடியாக 14 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளார். இதனால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள், உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் ஒருவரான விஸ்வநாத் தெரிவித்துள்ளார் .
ஆனால், தாம் சட்டப்படி செயல்பட்டுள்ளதால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 எம்.எல்.ஏ.க்கள் எங்கு சென்றாலும் தமக்கு கவலை இல்லை என்று சபாநாயகர் கே.ஆர். ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவுப்படி, திங்களன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பா திட்டமிட்டுள்ளார். அப்போதே நிதி மசோதாவையும் தாக்கல் செய்ய அவர் முடிவு செய்துள்ளார் .