14 இலங்கை மீனவர்களை மடக்கி பிடித்து இந்திய படை. ஆட்சி மாறியதால் காட்சி மாறுகிறது.

20458308.cmsகடந்த பத்து வருடங்களாக தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சிறைபிடித்த்தாக நாம் அடிக்கடி செய்தி படித்திருப்போம். முதல்முறையாக  இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.

இலங்கை மீனவர்கள் 14 பேர் நேற்று இந்திய கடல்பகுதியில் நுழைந்து அத்துமீறி மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அவர்களை கடலோர காவல்படையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்கள் வந்த 3 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 14 இலங்கை மீனவர்களும் தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள கடலோர காவல்படையினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 14 மீனவர்களையும் ஜூன் மாதம் 4ஆம் தேதிவரை காவலில் வைக்க ராமநாதபுரம் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அவர்களை அனைவரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

காங்கிரஸ் ஆட்சி இருந்தவரை இலங்கை மீனவர்கள் மிகவும் தைரியமாக இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து மீன்களை பிடித்து வந்தனர். ஆனால் தமிழக மினவர்கள் மட்டும் எல்லை தாண்டினால் உடனடியாக கைது செய்யப்படும் நிலை இருந்தது. மத்தியில் ஆட்சி மாறினதும் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் நடந்துள்ளது. இதனால் இலங்கை மீனவர்கள் கடும் அச்சத்தில் இருக்கின்றனர்.

Leave a Reply