4.9 வினாடியில் க்யூப் விளையாட்டை முடித்து உலக சாதனை செய்த 14 வயது சிறுவன்
நாம் பொழுதுபோகாமல் விளையாடும் க்யூப் என்னும் விளையாட்டில் 14 வயது சிறுவன் ஒருவன் உலக சாதனை செய்துள்ளான். அவர் அந்த விளையாட்டை வெறும் 4.9 வினாடிகளில் முடித்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் உள்ள Clarksville, Md. என்ற பகுதியை சேர்ந்த Lucas Etter என்ற 14 வயது சிறுவன் க்யூப் விளையாட்டை வெறும் 4.9 வினாடிகளில் முடித்து உலக சாதனை செய்துள்ளார். இதற்கு முன்னர் இந்த விளையாட்டை 5.25 வினாடிகளில் முடித்ததே உலக சாதனையாக இருந்தது.
Lucas Etter என்ற சிறுவனுக்கு க்யூப் விளையாட்டை ஆரம்பிக்கும் முன்னர் 15 வினாடிகள் மட்டுமே அதை பார்ப்பதற்கு நேரம் கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் க்யூபை பார்த்த அந்த சிறுவன் 4.9 வினாடியில் விளையாட்டை முடித்து அனைவரையும் அதிசயிக்க வைத்தார். இதுகுறித்த வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இரண்டே நாட்களில் இந்த வீடியோவை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். நமது சென்னை டுடே நியூஸ் வாசகர்களுக்காக அந்த வீடியோ இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.