பீகாரின் புதிய எம்.எல்.ஏக்க்களில் 142 பேர் கிரிமினல்களா? திடுக்கிடும் தகவல்

பீகாரின் புதிய எம்.எல்.ஏக்க்களில் 142 பேர் கிரிமினல்களா? திடுக்கிடும் தகவல்
bihar
சமீபத்தில் நடைபெற்று முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. நிதிஷ்குமார் வரும் 20ம் தேதி மீண்டும் 3வது முறையாக முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் பீகாரில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட 243 எம்.எல்.ஏக்களில் 142 பேர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

பீகாரின் மொத்த எம்.எல்.ஏக்களில் பாதிக்கும் மேல் கிரிமினல் வழக்கில் சிக்கியவர்களாக உள்ள இந்த செய்தி பலரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 142 பேர்களில் அதிகளவில் லாலு பிரசாத் யாதவ் கட்சியில் இருந்துதான் கிரிமினல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவருடைய ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியில் இருந்து 46 எம்.எல்.ஏக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து  37 பேர் மீதும், பாரதிய ஜனதா கட்சியில் இருந்து 34 பேர் மீதும் காங்கிரஸ் கட்சியில் இருந்து 16 பேர் மீதும் சி.பி.ஐ. கட்சியில் இருந்து  3 பேர் மீதும் கிரிமினல்வழக்குகள் உள்ளன. மக்களை காக்கும் எம்.எல்.ஏக்களே கிரிமினல்களாக இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Leave a Reply