மெரீனாவில் 144 தடை உத்தரவு. நடைப்பயிற்சி செல்பவர்களுக்கும் தடையா?

மெரீனாவில் 144 தடை உத்தரவு. நடைப்பயிற்சி செல்பவர்களுக்கும் தடையா?

சென்னை மெரீனாவில் கடந்த வாரம் வரலாறு காணாத வகையில் இளைஞர்களின் எழுச்சி போராட்டம் நடந்ததை அடுத்து மீண்டும் அதேபோல் ஒரு போராட்டம் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை மெரீனாவில் கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை போராட்டம் நடத்த நேற்று தடை விதித்துள்ள நிலையில் இன்று அதே பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாக காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் இன்று மீண்டும் கூடி போராட்டம் நடத்த இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதை இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக காவல் கூடுதல் ஆணையர் சங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனால், மெரினா கடற்கரை பகுதிகளில் பேரணி, ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி ஆகிய போராட்டங்களை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதே சமயத்தில் 144 தடை உத்தரவால் நடை பயிற்சி, சுற்றுலாவுக்காக மெரினாவுக்கு வருபவர்களுக்குத் தடை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த தடை உத்தரவு இன்று நள்ளிரவு முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் சங்கர் தெரிவித்தார்.

Leave a Reply