நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு: கலெக்டர் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு: கலெக்டர் அறிவிப்பு

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரியை இன்று தமிழகத்தின் தென்மாவட்டமானா நெல்லை மாவட்டத்தில் நுழையும் என்று எதிர்பார்க்கபப்டும் நிலையில் நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்றிரவு முதல் மார்ச்.23 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தார் ஆட்சியர் சந்தீப் நந்தூரி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உபியில் ஆரம்பித்த இந்த ரதயாத்திரை இந்தியாவின் பல மாநிலங்கள் வழியாக சென்று, இறுதியில் ராமேஸ்வரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து தற்போது கேரளாவில் உள்ள இந்த ரதம் இன்று செங்கோட்டை வழியாக தமிழகத்தில் நுழையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ரத யாத்திரை தமிழகத்திற்குள் நுழைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

 

Leave a Reply