ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 1க்கு பிறகும் நீடிக்குமா?

ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 1க்கு பிறகும் நீடிக்குமா?

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்லது. இதற்கான தமிழக அரசின் அரசாணையும் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து இன்று மாலை 6 மணிக்கு மேல் 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடக்கூடாது. அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்படும். டீ விற்பனை நிலையங்களில் பொதுமக்கள் கூட்டமாகக் கூட அனுமதியில்லை

பெட்ரோல், கேஸ் ஏஜென்சிகள் செயல்படலாம். பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்திற்கும் அனுமதி உண்டு. கால்நடை தீவன விற்பனை நிலையங்கள், பால் பூத்துகள், வங்கி ஏடிஎம்கள், ஊடக அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும். உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்க அனுமதி உண்டு.

இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பின்னர் கொரோனா வைரஸ் இருக்கும் நிலையை பொருத்தே ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா? அல்லது விலக்கி கொள்வதா என்பது குறித்த முடிவை தமிழக அரசு எடுக்கும். ஆனால் இப்போது இருக்கும் நிலையைப் பார்க்கும்போது ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாகவே கூறப்படுகிறது.

Leave a Reply