தெற்காசிய கூடைப்பந்து சங்க சாம்பியன்ஷிப் போட்டி: முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி.

basketஇந்தியா, நேபாளம், வங்கதேசம், இலங்கை, பூடான், மாலத்தீவு ஆகிய நாடுகள் விளையாடி வரும் நான்காவது தெற்காசிய கூடைப்பந்து சங்க சாம்பியன்ஷிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா முன்னிலை வக்கின்றது.

இந்திய அணி  முதல் போட்டியில் 90-37 என்ற புள்ளிகள் கணக்கில் நேபாளத்தையும், இரண்டாவது ஆட்டத்தில் 122-39 என்ற புள்ளிகள் கணக்கில் வங்கதேசத்தையும் வீழ்த்தியது. பெங்களூரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் இந்தியா – நேபாள அணியுடன் மோதியது. இந்திய அணியில் முன்னணி வீரர்களான அம்ரித்பால் சிங், அம்ஜியோத் சிங்  மற்றும் அனுபவ வீரர்கள் யத்வின்டர் சிங், விஷேஸ் பிரிகுவான்ஷி ஆகியோர் பங்கேற்கவில்லை. இருப்பினும் தமிழகத்தின் அரவிந்த் அண்ணாதுரை, கர்நாடகாவின் அரவிந்த், இந்திய ஜுனியர் அணியின் முன்னாள் கேப்டன் குர்விந்தர் சிங் கில் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினர்.

தொடக்கம் முதல் கடைசி வரை ஒவ்வொரு கால் பகுதியிலும் ஆதிக்கம் செலுத்திய இந்தியா அணி மிக அபாரமான வெற்றியை பெற்றது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பிரசாத் ராமலிங்காவின் முன்னோடியான ஸ்காட் பிளெம்மிங்கின் 3 உத்திகளை வீரர்கள் ஆட்டத்தில் செயல்படுத்தினர். அது சரியாக செயல்பட, இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது.
முதல் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது ஆட்டத்திலும் இந்திய அணி 122-39 என்ற புள்ளிகள் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
.

Leave a Reply