பங்களாதேஷில் 15 இந்து கோவில்கள் அடித்து உடைப்பு. நாடு முழுவதும் பதற்றம்
பங்களாதேஷ் நாட்டில் உள்ள ஒருவர் இஸ்லாமிய மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்டதை அடுத்து அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 15 இந்து கோவில்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பங்களாதேஷில் உள்ள பிரமன்பரியா என்ற பகுதியை சேர்ந்த ரஸ்ராஜ் தாஸ் என்பவர் இஸ்லாமிய மதத்தை விமர்சித்து சமூக வலைதளமான முகநூலில் கருத்துக்களை பதிவு செய்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் அவரது செயலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்லாமிய மதரசா மாணவர்கள் ஆர்ப்பாட்டமும், பேரணியும் நடத்தியதோடு 15 இந்து கோவில்களை அடித்து சேதப்படுத்தினர். அத்துடன் இல்லாமல் அங்கிருந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட இந்துக்களின் வீடுகளையும் தப்படுத்தி கொள்ளையிட்டனர். இதில் சிலர் காயமும் அடைந்தனர்.
இதனால் அந்த பகுதியின் பாதுகாப்பிற்காக போலீஸ் அதிரடிப்படை, துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஒரு சிலர் தேடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.