ஒரே நாளில் 15 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை: எகிப்து நாட்டில் பரபரப்பு
எகிப்து நாட்டில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 15 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு அனைவரும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இதனால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டில் எகிப்து நாட்டில் உள்ள சினாய் பிராந்தியத்தில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் தொடர்புடைய 15 தீவிரவாதிகளை பிடித்த அந்நாட்டு ராணுவம் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் எகிப்து ராணுவ நீதிமன்றம் 15 தீவிரவாதிகளுக்கும் மரண தண்டனை விதித்தது.
இதையடுத்து, 15 பேரும் நேற்று தூக்கிலிடப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது தான், ஒரே நாளில் 15 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த மாதம் மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் பலியானதை தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எகிப்து அரசு தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.