பேச்சுரிமை குறித்து விவாதம் செய்ய தயாரா? கண்ணையாகுமாருக்கு 15 வயது மாணவி சவால்

பேச்சுரிமை குறித்து விவாதம் செய்ய தயாரா? கண்ணையாகுமாருக்கு 15 வயது மாணவி சவால்
kannaiya kumar
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு பெரும் சவாலாக இருந்து வருபவர் ஜே.என்.யூ மாணவர் தலைவர் கண்ணையாகுமார். பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் பேசியதாக இவர் மீது குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் இது தனது பேச்சுரிமை என்று கூறி தனது அதிரடி பதிலை மத்திய அரசுக்கு அளித்து வருகிறார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் பேச்சுரிமை என்றால் என்ன? என்பது குறித்து கண்ணையாகுமார் தன்னிடம் பொதுவிவாதம் செய்ய தயாரா? என்று சவால் விடுத்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 15 வயது மாணவி ஜான்வி என்பவர்  லூதியானாவில் டி.ஏ.வி பள்ளியில் படித்து வருகிறார். இவர் ஏற்கனவே ஸ்டிங் ஆபரேஷன் என்று ஒரு அமைப்பை நடத்தி அதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை பிடித்து காவல்துறையினர்களிடம் ஒப்படைத்தார்.

அன்னை தெரசாவை தனது ரோல்மாடலாக கொண்டு சமூக அக்கறையுடன் வாழ்ந்து வரும் இவர் சிசுக்கொலை குறித்து ஆவணப்படம் ஒன்றையும் எடுத்துள்ளார். இந்த ஆவணப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி தனது சேவைகளுக்காக ஜனாதிபதியிடம் விருதும் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்தியாவுக்கு எதிராக கருத்து கூறி வருபவராக கருதப்படும் கண்ணையாகுமார் விவகாரம் குறித்து பத்திரிகைகளின் மூலம் தெரிந்து கொண்ட ஜான்வி, பேச்சுரிமை குறித்து விவாதம் செய்ய கண்ணையாகுமார் தயாரா? என்று சவால் விடுத்துள்ளார். 15 வயது மாணவியின் சவாலை கண்ணையாகுமார் ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply