சென்னை சென்ட்ரலில் இருந்து ஜூன் மாதத்திற்கு பிறகு காலை 6.10 மணி முதல் ரயில் சேவை தொடங்கியது.
முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கான பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகிறது. பயணிகளுக்கு உடல் வெப்ப சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்
அதேபோல் சென்னையில் 5 மாதத்திற்கு பிறகு இன்று மெட்ரோ ரயில் சேவை தொடங்குகிறது. காலை 8 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் நிலையில் காலை 7 மணிக்கு தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் மெட்ரோ ஏற்பாடுகளை ஆய்வு செய்து முதல் பயணத்தை தொடக்கி வைக்கிறார்
5 மாதங்களுக்கு பின் ரயில்கள், மெட்ரோ ரயில்கள் ஓடத்தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.