ஐசிசிஐ வங்கியின் முன்னாள் இயக்குனர் சாந்தா கோச்சரின் கணவர் கைது: பரபரப்பு தகவல்

ஐசிசிஐ வங்கியின் முன்னாள் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சாந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்

ஐசிஐசிஐ வங்கியில் இருந்து வீடியோகான் நிறுவனத்துக்கு 3250 கோடி ரூபாய் கடனை முறைகேடாக சாந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சர் பெற்றுத்தந்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

வீடியோகானின் வேணுகோபால் தூத் தீபக் கோச்சருடன் இணைந்து ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும், இந்த பணத்தை வேறு கணக்கிற்கு மாற்றியதாக புகார் கூறப்பட்டது

இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட புகாரையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தீபக் கோச்சரை கைது செய்துள்ளனர். சாந்தா கோச்சர் மற்றும் தீபக் கோச்சர் ஆகிய இருவரையும் அமலாக்கத்துறை விசாரணை செய்ததாகவும் விசாரணைக்கு பின் தீபக் கோச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது

Leave a Reply