தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தாலும் இடையிடையே மழை பெய்த நிலையில் நாளை முதல் கோடை மழை இருக்காது என்றும் தமிழகம் முழுவதும் அதிகபட்ச வெப்ப நிலையாக வெயில் சுட்டெரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
நாளை முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், கரூர் உள்பட 22 மாநிலங்களில் அதிகபட்சமாக வெப்பநிலை இருக்கும் என்றும் வழக்கத்தைவிட 5 டிகிரி பாரன்ஹீட் அதிக வெப்பம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
ஏப்ரல் 21 22 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம்,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகை,மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.