16 வயது சிறுமியின் அரை நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டிய சென்னை வாலிபர் கைது!

16 வயது சிறுமியின் அரை நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டிய சென்னை வாலிபர் கைது!

16 வயது சிறுமி ஒருவரின் அரை நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டிய சென்னை வாலிபர் ஒருவர் போக்கு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராமில் வாலிபர் ஒருவரிடம் பழகி உள்ளார். இந்த நிலையில் திடீரென ஒருநாள் அத்துமீறி அந்த வாலிபர் பேசியதால் சிறுமியை சுதாரித்துக் கொண்டு அந்த வாலிபரின் நட்பை துண்டித்து விட்டார்

இதன் பின்னர் அந்த வாலிபர் வேறொரு பெண் பெயரில் புதிய கணக்கு தொடங்கி மீண்டும் சிறுமியுடன் தொடர்பு கொண்டார். அப்போது அவர் பெண் குரலில் பேசியதால் அந்த வாலிபர் எனத் தெரியாத சிறுமி அவரிடம் சகஜமாக பழகி உள்ளார்

இந்த நிலையில் ஒருநாள் சிறுமி குளித்து கொண்டிருக்கும் போது அந்த வாலிபரின் இருந்து வீடியோ கால் வர, அரை நிர்வாண நிலையில் குளித்து கொண்டே அவர் பேசியுள்ளார். இந்த நிலையில் அந்த வாலிபர் சிறுமியின் அரை நிர்வாண குளியல் வீடியோ தனது மொபைல் போனில் சேமித்து பின்னர் அவருடைய வாட்ஸ் அப்புக்கு அந்த வீடியோவை அனுப்பி தன்னுடன் உறவு கொள்ள வேண்டும் என மிரட்டியுள்ளார்

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி போலீசில் புகார் செய்ய தற்போது அந்த வாலிபரை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

Leave a Reply