இலங்கையில் 16 அமைச்சர்கள் அதிரடி நீக்கம்
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த 16 அமைச்சர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
பதவி நீக்கப்பட்ட 6 பேர் கேபினட் அந்தஸ்து அமைச்சர்கள் என்றும் 10 பேர் இணை மற்றும் துணை அமைச்சர்கள் என்றும் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்கள் அனைவரும் அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பதவி நீக்கப்பட்ட அமைச்சர்கள் அதிபர் சிறிசேனாவின் தலைமையின் கீழ் செயல்பட போவதாகவும், ராஜபக்சேவை தொடர்ந்து எதிர்க்க போவதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.