167 பயணிகள் திடீர் மாயம், பெரும் பரபரப்பு
வெளிமாநில தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்புவதற்காக கடந்த சில நாட்களாக சிறப்பு ரயில்கள் இயங்கி வருகிறது என்பது தெரிந்ததே. அந்தவகையில் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் சென்ற ரயிலில் பயணம் செய்த 167 பயணிகளை திடீரென காணாமல் போனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த புதன்கிழமை குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் 1340 பயணிகளுடன் சிறப்பு ரயில் கிளம்பியது
அந்த ரயில் வெள்ளிக்கிழமை ஹரித்துவார் வந்தபோது பயணிகளை சோதனை செய்தபோது 1173 பயணிகள் மட்டுமே இருந்தனர். மீதி 167 பயணிகள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை
கொரோனா சோதனைக்கு பயந்து அவர்கள் வழியிலேயே இறங்கி விட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது
ரயிலில் பயணம் செய்த 167 பயணிகள் திடீரென காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது