தமிழகத்தில் 17 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.

9தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 17 பேரை இடமாற்றம் செய்து நேற்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று மாலை தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் ”தொல்லியத் துறை ஆணையராக கார்த்திகயேனும், கருவூலம் மற்றும் கணக்குள் துறை இயக்குனராக முனிநாதனும், மதுவிலக்கு ஆயத்தீர்வு ஆணையராக சீதாராமனும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளராக மோகன் பியாரேவும், நில சீர்திருத்த துறை இயக்குனராக கலையரசும், வருவாய்த்துறை (பேரிடர் மேலாண்மை, குறை தீர்ப்பு) இணை ஆணையராக லில்லியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், மீன்வளத்துறை ஆணையராக பீலா ராஜேஷும், சமூக பாதுகாப்புத் திட்ட ஆணையராக பிரதீப் யாதவும், கால்நடைத்துறை இயக்குனராக டி.ஆப்ரஹாமும், போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளராக பிரபாகர் ராவும், போக்குவரத்துத் துறை ஆணையராக சத்யப்ரதாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக கே.ஸ்கந்தனும், சமூக பாதுகாப்புத் துறை இயக்குனாக மணிமேகலையும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

அதேபோல், கடலூர் மாவட்ட ஆட்சியராக சுரேஷ்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளார்” எனக் கூறப்பட்டுள்ளது.

இவர்கள் உள்பட மொத்தம் 17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply