காஷ்மீரில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் 17 ராணுவ வீரர்கள் பலி.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அவ்வப்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நேற்று தீவிரவாதிகளில் தாக்குதல் 17 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென ராணுவ கட்டுப்பாட்டு தளத்திற்கு புகுந்த நான்கு தீவிரவாதிகள் திடீரென சரமாரியான தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 4 தீவிர்ஃஅவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்த தாகுதல் குறித்து கேள்விப்பட்டவுடன் மத்தியஉள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ரஷ்யா பயணத்தை ரத்து செய்துவிட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். மேலும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அவர்களும் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
இந்த தாக்குதலை பிரதமர் மோடி கடுமையாக கண்டித்துள்ளார். அவர் தனது டுவீட்டரில், “இது கோழை தனமான தாக்குதல். இந்த தாக்குதலுக்கு காரணமான தேசம் நிச்சயம் தண்டிக்கப்படும்” என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
சுட்டுகொல்லப்பட்ட நான்கு தீவிரவாதிகளும் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.