18 ஆயிரம் கோடி பிணைத்தொகை செலுத்தினால் வெளிநாடு செல்லலாம்: நீதிமன்றம் அதிரடி

18 ஆயிரம் கோடி பிணைத்தொகை செலுத்தினால் வெளிநாடு செல்லலாம்: நீதிமன்றம் அதிரடி

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், 18 ஆயிரம் கோடி ரூபாய் பிணையாக செலுத்தினால் அவர் வெளிநாடு செல்லலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் நிலையில், அந்நிறுவனத்தின் பங்குகளை விற்று பணத்தை திரும்பப்பெற கடன் கொடுத்தவர்கள் முயற்சித்துவருகின்றனர். இதனிடையே கடனாக பெற்ற தொகையை நரேஷ் கோயல் வேறு நிறுவனங்களுக்கு மாற்றியதாலேயே கடன் நெருக்கடி ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு நரேஷ் கோயல் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் நரேஷ் கோயல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், இதனை விசாரித்த நீதிமன்றம், லுக் அவுட் நோட்டீஸை திரும்பப்பெற முடியாது என உத்தரவிட்டது. மேலும், நரேஷ் கோயல் 18 ஆயிரம் கோடி ரூபாய் பிணைத் தொகை செலுத்தினால் வெளிநாடு செல்லலாம் எனவும் தெரிவித்தது.

Leave a Reply