18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் கடந்த 4-ம் தேதி, விசாரணைக்கு வந்தபோது, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தது, அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றும், ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் தரப்பு மீது, ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கை வரும் நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. சுமார் ஒரு மாத காலத்திற்கு இந்த வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அதுவரை எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆபத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.