18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கமா? சபாநாயகர்-அரசு கொறடா திடீர் ஆலோசனை
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று சபாநாயகர் தனபால் உத்தரவிட்டிருந்தார். இந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில் சபாநாயகர் முன் ஆஜராக போவதில்லை என்று இன்று காலை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வன் அறிவித்திருந்தார். இதன் மூலம் எம்.எல்.ஏக்கள் இன்று ஆஜராக மாட்டார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் சற்றுமுன்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன், அரசு கொறடா ராஜேந்திரன் சந்தித்து இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இவர்களுடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உடன் உள்ளார். இன்று நேரில் ஆஜராகாத் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் அறையில் தீவிர ஆலோசனை நடந்து வருவதாக தெரிகிறது. 19 எம்.எல்.ஏக்களில் ஒரு எம்.எல்.ஏ மட்டுமே ஏற்கனவே சபாநாயகர் முன் ஆஜராகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.