18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்: தலைவர்கள் கூறுவது என்ன?

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்: தலைவர்கள் கூறுவது என்ன?


முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் சற்றுமுன்னர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்து தலைவர்களின் கருத்து என்ன என்பதை பார்ப்போம்

ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள ஜனநாயக படுகொலை என இந்திய பொதுவுமைக் கட்சியின் தமிழ்நாட்டின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க நடவடிக்கையின் பின்புலத்தில் மத்திய அரசு இல்லை என்றும்
ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்றுதான் முதலமைச்சர் விரும்புவார் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்

சட்டப்பேரவை பாரம்பரியத்தை குழிதோண்டி புதைத்துவிட்டார் சபாநாயகர் என திமுகவின் முக்கிய தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், “சட்டப்பேரவையில் கொறடா உத்தரவை மீறினால் மட்டுமே தகுதி நீக்க உத்தரவு செல்லும். ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சபாநாயகரை ஆட்சியாளர்கள் பயன்படுத்துகிறார்கள். கட்சித்தாவல் நடவடிக்கை என்றால், 18 பேர் எந்தக் கட்சிக்குத் தாவினர். தேர்தல் ஆணையத்தில் வழக்கு உள்ள நிலையில், 18 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் சென்றால், நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது. அரசைக் காப்பாற்றிக்கொள்ள செய்யப்பட்ட தந்திர நடவடிக்கை” என்று கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலைப் பொறுத்தவரை நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும். ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ளவே டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

மேலும் தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் மூத்த வழக்கறிஞர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Leave a Reply