ஒரே நாளில் 18 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல். இங்கிலாந்தில் பரபரப்பு

ஒரே நாளில் 18 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல். இங்கிலாந்தில் பரபரப்பு
england
இங்கிலாந்து நாட்டில் தலைநகர் லண்டன் மற்றும் மேற்கு மிட்லேண்ட் ஆகிய நகரங்களில்  உள்ள 18 பள்ளிக்கூடங்களில் ஒரே நாளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்ததால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை 8 மணியளவில் லண்டனில் உள்ள முக்கிய  பள்ளி கூடங்களுக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து அங்கு கல்வி பயின்று கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் உடனடியாக போலீசாரின் உதவியால் வெளியேற்றப்பட்டனர். இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல் ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து நாட்டின் 14 பள்ளிக்கூடங்களுக்கு விடப்பட்டு  அது வெறும் புரளி என பின்னர் தெரியவந்தாலும், மிரட்டல் வந்த அனைத்து 18  பள்ளி கூடங்களிலும் போலீஸார் சோதனையிட்டனர்.

இந்த மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர். ஒரே வாரத்தில் 3வது முறையாக இங்கிலாந்து நாட்டு பள்ளிக்கூடங்களுக்கு விடப்பட்டுள்ள வெடிகுண்டு மிரட்டல் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் லண்டன் மற்றும் மேற்கு மிட்லேண்ட் நகரங்களில் உள்ள தலா 4 பள்ளிக்கூடங்களுக்கும் மற்றும் கார்ன்வால் நகரத்தின் 4 பள்ளிக்கூடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.

முழுமையான சோதனைக்கு பின்னர் இந்த மிரட்டல்கள் போலியானவை என போலீசாரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் நேற்று மதியம் முதல் ஒருசில பள்ளி கூடங்கள் மீண்டும் செயல்பட தொடங்கின.

Leave a Reply