மும்பை அருகே பயங்கர ரயில்விபத்து. 18 பேர் பலி. 145 பேர் படுகாயம்.

  16 மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று காலை நடந்த பயங்கர ரயில் விபத்து ஒன்றில் 18 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 145 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள , திவா – சஸ்வந்த்வாடி என்ற பயணிகள் ரயில் இன்று காலை 9.40 மணியளவில் நாகோதானே – ரோஹா ரயில் நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இன்ஜின் உள்பட 4 பெட்டிகள் தடம் புரண்டது. போதிய மருத்துவ வசதியில்லாத இடத்தில் விபத்து நடந்ததால் காயம் அடைந்தவர்களை உடனடியாக அருகில் உள்ள நகரத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் விரைவாக கொண்டு செல்லப்பட்டனர்.

16bஇந்த விபத்தில் உயிர் இழந்த 18 பேர்களுக்கும் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுனே கார்கே உத்தரவிட்டுள்ளார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வழங்கவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த ரயில்வே போலீஸாருக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. விபத்திற்கு சதிவேலை காரணமா? என்கிற ரீதியிலும் விசாரணை நடந்து வருகிறது.

கடந்த 1ஆம் தேதி சென்னை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் ரயில்வே துறை மேலும் ஒரு விபத்தை சந்தித்துள்ளது. இது ரயில்வே துறை அதிகாரிகளுக்கும், அமைசருக்கும் கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

16a

Leave a Reply