18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர்களை சபாநாயகர் பதவி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இந்த செய்தி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய முதல் பெஞ்ச், 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கில், இன்று மதியம், 1:00 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.
இன்றைய தீர்ப்பில், மூன்று விதமான உத்தரவுகள் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.. சபாநாயகரின் உத்தரவு செல்லாது அல்லது சபாநாயகரின் உத்தரவு செல்லும் என, தீர்ப்பு வரலாம். அல்லது, இரு நீதிபதிகளும் மாறுபட்ட உத்தரவை பிறப்பிக்கலாம். அவ்வாறு பிறப்பித்தால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு செல்லும்.
எப்படி இருந்தாலும், பாதிக்கப்படுவோர், சுப்ரீம் கோர்ட் செல்ல வாய்ப்பு இருப்பதால் இன்றைய தீர்ப்பு ஆளும் அரசை எந்தவிதத்திலும் பாதிக்காது என்றே சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர். .