தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கவர்னருடன் திடீர் சந்திப்பு: ஆட்சி கவிழுமா?
அதிமுகவின் இரு அணிகளான ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி நேற்று இணைந்து ஒன்றுபட்ட அதிமுகவாக உருவாகியுள்ளது. மேலும் சசிகலாவை கட்சியில் இருந்தும் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சசிகலாவின் குடும்பமே இனி அதிமுகவில் ஆதிக்கம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்சியை கவிழ்க்க தினகரன் தரப்பு முடிவு செய்யலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏக்கள் கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவு வாபஸ் என்று கூறவுள்ளதாகவும், முதல்வர் தனது மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது