18 படிகளில் அக்.17 -ல் கும்பாபிஷேகம் சபரிமலை நடை முன்னதாக திறப்பு!

LRG_20151003114026657012

புதிதாக ஐம்பொன் தகடுகள் பதிக்கப்பட்ட 18 படிகளில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக ஐப்பசி மாத பூஜையின் போது சபரிமலை நடை ஒரு நாள் முன்னதாக 16-ம் தேதி மாலை திறக்கிறது. 17-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

சபரிமலை புனித பயணத்தில் முக்கிய பங்கு வகிப்பது 18 படிகள். 18 மலை தேவதைகளை குடியிருத்தி கட்டப்பட்ட இந்த படிகளில் விரதமிருந்து இருமுடி கட்டு ஏந்தி வரும் பக்தர்கள் மட்டுமே ஏறமுடியும். காலத்தால் பழமையாகி விட்ட இந்த படிகளில் தற்போது புதிதாக ஐம்பொன் தகடுகள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வரும் 15-ம் தேதிக்குள் முடிவடைந்து விடும்.ஐப்பசி மாத பூஜைகளுக்காக வரும் 17-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்க வேண்டும். புதிய படிகளில் பக்தர்கள் ஏறுவதற்கு முன் பூஜைகள் நடத்தி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அதற்கு வசதியாக ஒரு நாள் முன்னதாக 16-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கிறது.

அன்று மாலை தந்திரி மகேஷ்மோகனரரு தலைமையில் சுத்தி கலச பூஜைகள் நடைபெறும். 17-ம் தேதி காலை கும்பாபிஷேகம் நடைபெறும். 16-ம் தேதி மாலை 5.30-க்கு நடை திறந்தாலும், 17-ம் தேதி மாலை 5.30 மணிக்கு பின்னர்தான் பக்தர்கள் 18-ம் படி வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.16-ம் தேதி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் வடக்கு வாசல் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

மேல்சாந்தி தேர்வு: அடுத்த கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான புதிய மேல்சாந்தி தேர்வு 18-ம் தேதி காலை எட்டு மணிக்கு சன்னிதானத்தில் நடக்கிறது. ஐப்பசி மாத பூஜைகள் 22-ம் தேதி வரை நடைபெறும். அன்று இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.

Leave a Reply