1800 ஊழியர்கள் பணி நீக்கம்!! மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிரடி!

மைக்ரோசாப்ட் அதன் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக பல்வேறு பிராந்தியங்களில் பணியாற்றி வந்த 1,800 பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது.

ஜூன் 30 அன்று அதன் நிதியாண்டு முடிவடைந்த பிறகு வணிகக் குழுக்கள் மற்றும் மறுசீரமைத்தல் காரணமாக சில பணியாளர்களை குறைத்துள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது.

இருப்பினும் தொடர்ந்து புதியதாக பணியாளர்களை பணியமர்த்துவோம் என்றும் நடப்பு நிதியாண்டில் அதிகமாக பணியாளர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருப்பார்கள்

சமீபத்தில் கூகுள் நிறுவனமும் 2022-ம் ஆண்டு புதிய பணியமர்த்தும் செயலை குறைக்கப்போவதாக அறிவித்தது.