தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இமாலய இலக்கு கொடுத்த பாகிஸ்தான்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இமாலய இலக்கு கொடுத்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் பாகிஸ்தான் எடுத்த நிலையில் 186 என்ற இலக்கை நோக்கி தற்போது தென்ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து வருகிறது.

சற்றுமுன் வரை தென்னாப்பிரிக்கா அணி 5 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 35 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்கா இன்றைய போட்டியில் வென்றால் இந்திய அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது