திருமணம் ஆன 7வது நாளில் 8 மாத கர்ப்பிணியான பெண்

திருமணம் ஆன 7வது நாளில் 8 மாத கர்ப்பிணியான பெண்

ஒரு பெண்ணுக்கு திருமணமாகி குறைந்தது ஒரு மாதம் கழித்தே கர்ப்பம் ஏற்படும் என்று இருக்கும் நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் திருமணமான ஏழே நாட்களில் எட்டுமாத கர்ப்பிணியாகியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கர்நாடக மாநிலம் நாகமங்கலா தாலுகாவில் உள்ள பீமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் வெங்கடேஷ் என்பவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு கடந்த 8-ம் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் திருமணமான ஏழாவது நாளில் தனக்கு திடீரென வயிறு வலிப்பதாக மணப்பெண் கூறியதை அடுத்து அவரை வெங்கடேஷ் டாக்டரிடம் அழைத்து சென்றார்.

புதுப்பெண்ணை பரிசோதத்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், இது அவருக்கு 8-வது மாதம் என்று கூறினர். இதனால் வெங்கடேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவரிடம் வெங்கடேஷ் குடும்பத்தினர் விசாரித்ததில் அந்த பெண்ணுக்கும் சந்திரசேகர் என்பவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து திருமணம் செய்வதாக சந்திரசேகர் உறுதி கூறியதை அடுத்து நெருங்கிப் பழகியதாகவும் இதனால் கர்ப்பம் அடைந்ததாகவும், ஆனால் கர்ப்பம் என்ற செய்தியை கேள்விப்பட்டு சந்திரசேகர் தலைமறைவாகிவிட்டதாகவும் கூறினார். இந்த நிலையில் வீட்டில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அதற்கு தனது கர்ப்பத்தை வீட்டில் உள்ளவர்களிடமும் மறைத்து ஓகே சொல்ல, திருமணம் நடந்திருக்கிறது. இப்போது சந்திரசேகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply