ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பதவிக்கு முதல்முதலாக பெண் வேட்பாளர்

ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பதவிக்கு முதல்முதலாக பெண் வேட்பாளர்

UNஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய பொதுச் செயலாளர் பான் கி மூன் அவர்களின் பதவிக்காலம் 31-12-2016 அன்று முடிவடைவதால் புதிய தலைவரை தேர்வு செய்யும் நடைமுறைகள் தற்போது தொடங்கிவிட்டது. இதுவரை ஆண்களே இந்த பதவியில் இருந்து வந்த நிலையில் முதன்முதலாக ஒரு பெண் இந்த பதவிக்கு போட்டியிட உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த பதவிக்கு ஐ.நா. சபையின் முன்னாள் தலைவரும் மேக்கடோனியா நாட்டைச் சேர்ந்த ஸ்ர்க்ஜான் கெரிம் மற்றும் குரோஷியா நாட்டைச் சேர்ந்த வெளியுறவுத்துறை பெண் அமைச்சர் வெஸ்னா புஸிக் ஆகியோர் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

193 நாடுகள் ஐ.நாவில் அங்கத்தினராக இருக்கும் நிலையில் எந்தெந்த நாடுகள் யார் யாரை வேட்பாளராக நிறுத்தவுள்ளது என்பது இன்னும் ஒருசில மாதங்களில் தெரிந்துவிடும். ஐ.நா.சபை தலைவரை பாதுகாப்பு கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்டு, அதிகமான பொதுச்சபை உறுப்பினர்களின் வாக்குகளை பெறுபவர்தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், கடந்த 70 ஆண்டுகளாக அமெரிக்கா, பிரிட்டைன், பிரான்ஸ், சீனா மற்றும் ரஷியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் கைகாட்டும் நபர்தான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இம்முறையும் இதே நடைமுறைதான் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

97 ஓட்டுகளுக்கு மேலாக பெற்றுவிடும் ஒருவர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார் என்று இருக்கும் நிலையில் முதன்முதலாக ஒரு பெண் தேர்வு செய்யப்படுவாரா? என்பதை அறியவே உலகமே மிக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply