196 கருணை மதிப்பெண்களுக்கு தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவால் மாணவர்கள் அதிர்ச்சி

196 கருணை மதிப்பெண்களுக்கு தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவால் மாணவர்கள் அதிர்ச்சி

சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் மொழிபெயர்ப்பு குளறுபடிகள் இருந்ததால் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்களாக வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இதனால் தமிழக மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து சி.பி.எஸ்.இ சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது தமிழ் மொழிபெயர்ப்பு தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களையே பயன்படுத்தியதாகவும், இந்த தவறுக்கு தமிழக அரசே பொறுப்பு என்றும் சி.பி.எஸ்.இ வாதாடியது.

இந்த நிலையில் நீட் வினா குளறுபடி, தமிழ்வழியில் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply