சந்திரனைப் பற்றி ஆராய்வதற்காக சீனாவின் சார்பில் அனுப்பப் பட்ட சேஞ்ச்-3 என்ற விண்கலம் வெற்றிகரமாக சந்திரனில் தரை இறங்கியுள்ளது. கடந்த 2ம் தேதி, சீனா ‘சேஞ்ச்-3’ என்ற விண்கலத்தை சந்திரனைக் குறித்து ஆராய்வதற்காக ஸிவாங் தளத்தில் இருந்து அனுப்பியது. இந்த விண்கலத்தை ‘லாங் மார்ச் 3பி’ என்ற ராக்கெட் சுமந்து சென்றது. இந்த விண்கலமானது திட்டமிட்டப் படி சந்திரனில் தரை இறங்கியுள்ளதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.