இந்தியா-இலங்கை டி-20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு தொடக்கம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டி தொடரில் 3-0 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடிய இந்திய அணி அதே உற்சாகத்துடன் இலங்கை அணியுடன் டி-20 கிரிக்கெட் தொடர் ஒன்றில் இன்றுமுதல் விளையாடவுள்ளது. இன்றைய முதல்போட்டி புனேவில் இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்திய அணியில் தோனி, அஸ்வின், பூம்ராவ், ஹர்பஜன்சிங், ஜடேஜா, குமார், நேகி, நெஹ்ரா, பாண்டே, ரஹானே, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை அணியில் சண்டிமால், சமீரா, டிக்வெல்லே, தில்சன், ஃபெர்னாண்டோ, குணரதேன், குணதிலகே, பெராரே, பிரசன்னா, ரஜிதா, செனநாயகே, ஷனாகே, சிறிவர்தனா, வெண்டர்சே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இன்று முதல் போட்டியும், வரும் 12ஆம் தேதி ராஞ்சியில் 2வது போட்டியும், 14ஆம் தேதி விசாகப்பட்டிணத்தில் மூன்றாவது போட்டியும் நடைபெறவுள்ளது.