2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து தலைவர்களின் கருத்துக்கள்:
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 2ஜி வழக்கின் தீர்ப்பு சற்று முன்னர் வழங்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பில் ராசா, கனிமொழி உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பால் திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் கூறியுள்ள கருத்துக்களை தற்போது பார்ப்போம்
மு.க.ஸ்டாலின்: அரசியல் வரலாறில் ஒரு கட்சியை அவமானப்படுத்தி அழிக்க போடப்பட்ட வழக்குதான் 2ஜி. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வந்துள்ளது.
சுப்பிரமணியன் சுவாமி: 2ஜி வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்
பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன்: நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது, ஊழல், லஞ்சத்தை ஒழிக்க வழிவகை செய்ய வேண்டும்
டிடிவி தினகரன்: 2 ஜி வழக்கில் அனைவரும் விடுதலை ஆனது தனக்கு மகிழ்ச்சி என்றும், தமிழர்களாக இருந்து விடுதலை பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், எதிர்க்கட்சியினர் என்பதால் சிறைக்கு செல்ல வேண்டும் என்று தான் நினைக்கவில்லை
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்: தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கின்றது
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு: ‘2ஜி வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது
2ஜி வழக்கின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கின்றது: டிடிவி தினகரன்
திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன்: 2ஜி வழக்கில் நியாயம் வென்றுள்ளது; இனி எல்லாமே வெற்றிதான்