2 நிமிடத்தில் கோளாறு : ரஷ்யா விண்வெளி மையம் அதிர்ச்சி
ரஷ்யாவில் இருந்து மனிதர்களுடன் விண்ணுக்கு செல்லும் ராக்கெட் ஒன்று அனுப்பப்பட்ட இரண்டே நிமிடத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இந்த திட்டத்தை அந்நாடு கைவிட்டது
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, அமெரிக்கா, ரஷ்யாவைச் சேர்ந்த 2 வீரர்கள், ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட் புறப்பட்டனர். கஜகஸ்தானில் புறப்பட்ட 2 நிமிடத்த்தில், பூஸ்டர் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
இதனால் பல்லாஸ்டிக் அவசர வாகனம் மூலம், விண்வெளி வீரர்கள் தரையிறங்கினர். இந்நிலையில் கோளாறு குறித்து விசாரணை நடத்த ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை தற்காலிகமாக ரஷ்யா நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.