2.0 படத்தின் 3வது பாடல்: இன்று வெளியீடு

2.0 படத்தின் 3வது பாடல்: இன்று வெளியீடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ள நிலையில் இன்று இந்த படத்தின் 3வது பாடலும் வெளியாகவுள்ளது. இந்த பாடலை மறைந்த நா.முத்துகுமார் எழுதியுள்ளார்.

மேலும் இந்த பாடலை தமிழில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் மற்றும் ஷாஷா திரிபதி ஆகியோரும் தெலுங்கில் பாகுபலி படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவானி அவர்களும் பாடியுள்ளனர்

இன்று ஒரே நாளில் ‘2.0’ படத்தின் டிரைலர் மற்றும் 3வது பாடல் வெளியாகவுள்ளதால் ரஜினி ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக கருதப்படுகிறது. மேலும் இந்த படம் இம்மாதம் 29ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply