லண்டனில் 2.0 படத்தின் ஆடியோ ரிலீஸ்?

லண்டனில் 2.0 படத்தின் ஆடியோ ரிலீஸ்?

enthiran 2.0சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லி ஜவஹர்லால் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷயகுமார் நடித்து வருகின்றனர். மேலும் அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக்பச்சன் ஆகிய இருவரும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம்பெற்றுள்ளது என்று கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கும் வதந்திக்கு தயாரிப்பாளர் ராஜூ மகாலிங்கம் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த படத்தில் எத்தனை பாடல்கள் உள்ளது என்பதை கேட்டால் அனைவரும் ஆச்சரியம் அடைவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவை பிரமாண்டமாக நடத்த லைகா நிறுவனத்தினர் முடிவு செய்துள்ளார்களாம்.

Leave a Reply