ரஜினியின் ‘2.0’ ரிலீஸ் தேதி ஜனவரிக்கு மாற்றம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.0 படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று லைகா நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. ஆனால் இந்த படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் முடிய இன்னும் குறைந்தது ஆறு மாதங்களுக்கு மேல் ஆகும் என்பதால் தற்போது இந்த படம் தீபாவளி தினத்திற்கு பதிலாக வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை லைகா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். எனவே இந்த படம் அடுத்த ஆண்டு குடியரசு தின விடுமுறையில் வெளிவரவுள்ளது.
2D, 3D, ஐமேக்ஸ் ஆகிய டெக்னாலஜியில் உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு படம் என்பது குறிப்பிடத்தக்கது.